1. நீ என்பதும்
நான் என்பதும்
கடந்து நாமாகி நிறுத்திய
அந்த நொடி எடுத்து வா
நான் வேறு
நீ வேறு எனப் பிரிந்த
இந்த நொடியைக் கடப்பதற்கு ......
-------------------------------
2. ஏந்திக் கொள்ளும்
கரங்களுக்காகவே
விழத் தொடங்குகிறது
‘’மழை’’
-------------------------------
3. எது கொண்டு மறைத்தாலும்
காட்டிக் கொடுத்து விடுகிறது
என் விழி கசியும் வெட்கம்---நீ
கடந்து செல்லும் போது மட்டும்....
- சாயாசுந்தரம்