man 323இல்லாமல் போன
எதுவும்
இருந்தவையே...
----------------------------------

பால்யங்களுக்குள்
நுழைகிறேன்
வெற்றுப் பாதங்களுடன்...
--------------------------------------

15 மாடிக்
கட்டிடத்தில்
வேலை செய்து விட்டு
குடிசையில் வாழும்
கட்டிடத் தொழிலாளிக்கு
வானம் பூமியாகிறது
பூமி வானமாகிறது
---------------------------------------

வரிகளில்
தவழ்கிறது
தழுவிய தூக்கம்...
------------------------------------

மிஞ்சிய
நினைவுகளில்
மீதம் இருப்பதில்லை...
------------------------------------

சொல் அற்ற
நினைவுகளில்
மீண்டும் ஒரு புனைவு...
---------------------------------------

நாளைய இரவும்
இன்றைய இரவும்
அவிழ்ந்து கொண்ட
முடிச்சில்
கீற்றென பகல்...
---------------------------------------

வெயில் கால
புழுதிக் காட்டில்
புரண்டு எழுந்த
சிறுவன்,
நீர்ப் பாம்பென
நுழையும் சந்து,
குறுக்கு வழி
காட்டுகிறது,
நீரில்லா கிணற்றுக்கு....
--------------------------------------------

- கவிஜி