kalliஆவாரங்காட்டில் ஆடுகளை மேயவிட்டு
கரட்டுப் பாறைமீது
காத்திருக்கும் இடைச்சியின்
செந்தாமரை முகமெண்ணி
ஆதுரம் பொங்க
அவளுக்குப் பரிசளிக்க
அன்றலர்ந்த செவ்வந்திகளை ஏந்தி
செந்தாழங்காட்டில் செம்மறிகளோடு
நடக்கிறான் ஈச்சங்காட்டு
இடையனொருவன்

காதல் பொங்கிப் பிரவகிக்கும்
அவன் கண்களில்
வழிநெடுக எதிர்ப்படும்
கள்ளிப்பூக்களுக்கு
எதேச்சையாய் வாய்த்துவிடுகிறது
காட்டுரோசாக்களின் சாயல்.

- ஸ்ரீதர்பாரதி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.