கீற்றில் தேட...

sand theft

இவ்வாண்டின்
ஆகச்சிறந்த அரசியல் கவிதை
எதுவென்று
அறிந்து கொள்ள
ஆவல் பொங்குகிறதா தோழர்காள்?

ஆளரவமற்ற பொழுதில்
ஆற்றுமணலை
அதிகாரமாய் அள்ளிப் போன
சரக்குந்தை
சளைக்காமல் துரத்திச்சென்ற
ப்ரியத்துக்குரிய சினேகிதன்
பைரவனின்
"வள்!!!! வள்!!!" தானது!