செஞ்செயல் வாழி; சமதர்மமே! என்
நெஞ்சம் திறப்போர் நிற்காண் குவரே!
அகிலம் தன்னை ஆளும் மனிதன்
மகிழ்வுடன் வாழவும் மன்னுயிர் காக்கவும்
ஒன்றே லழியாய்த் திகழும் உன்னை
என்றும் போற்றுவேன் வாழி! வாழி!!

(செம்மையான செயல்களைச் செய்யும் (வலிமை கொண்ட) சோஷலிச அமைப்பு வாழியவே! என் நெஞ்சில் அனைவரும் நின்னையே காண்பர். இவ்வுலகத்தை ஆளும் மனிதன் மகிழ்வுடன் வாழவும், மற்ற உயிரினங்களும் அழியாமல் பாதுகாக்கப்படவும் ஒரே வழியாகத் திகழும் சோஷலிச அமைப்பை என்றும் வாழ்க, வாழ்க என்று போற்றுவேன்.)

- இராமியா