நான் எல்லை மீறிவிட்டதாக
நிரூபிப்பதற்காக
சுவர் ஓவியங்களை
தலைகீழாக மாட்டியிருக்கிறாய்
கதவு நிலையை
கூரையில் தொங்கவிட்டிருக்கிறாய்
சிரசாசனம் செய்தபடி
பேசப்பழகியிருக்கிறாய்
உன் அறியாமையை எண்ணிச் சிரித்தபடி
இன்னொரு கோப்பையை நிறைக்கிறேன்
கடைசிக் கோப்பையின்
கடைசிச் சொட்டுக்குமுன்
உன் தோல்வியைப்
பொறுக்க முடியாமல்
விளக்கணைக்கிறாய்