தாய்மொழி
ஒரு செய்தி கொண்டுவந்திருக்கிறது
அந்தச் செய்தி நமக்கானது
காதல் ஒரு தேவரினமல்ல
அது கவுண்டருமில்லை
தலித்துமில்லை
அது இந்து மதமோ இஸ்லாமோ அல்ல
அது மகாராட்டிரத்தையோ
வங்காளத்தையோ சேர்ந்ததல்ல
அது உயிர்களின் பாடல்
அது அமெரிக்காவையும்
இங்கிலாந்தையும் சேர்த்துவைக்கும்
கன்னடத்தையும் தமிழையும்
ஒரே வீட்டிற்குள் வாழவைக்கும்
மலையாள உதடுகளையும்
தமிழ் உதடுகளையும் முத்தமிட வைக்கும்
பூமியெங்கும் ஒலிக்கும் ஒரே பாடல்
அந்தப் பாடல்களால் நிரம்பி வழிகிறது சங்கத்தமிழ்
தாய்மொழிக்கு
என்ன உத்ரவாதத்தை தரப்போகின்றோம்
கீற்றில் தேட...
தாய்மொழி
- விவரங்கள்
- கோசின்ரா
- பிரிவு: கவிதைகள்