கீற்றில் தேட...

man

பச்சை மனிதன்
ஒரு நிழல் தேடி அலைகிறான்
பொய் முகம் கொண்ட
நிழலில் அமர்கிறான்
நிழல் அவனுக்கு
தன் வரலாற்றை சொல்லத்தொடங்கிற்று
வரலாற்றில் மயங்கியவன்
நிழலின் கதையை
தன் சம்பவங்களில் எழுதுகிறான்
சம்பவங்களில் கோர்க்கின்றான்
அழகை புனைவை
அதீத கற்பனையை
புனைவிலிருந்து எழுந்த ஒரு பெண்ணை
காதலித்து அங்கேயே குடியேறி விட்டான்
புனைவு என்பதை மீறி
அவன் நம்பத்தொடங்கி விட்டான்
அவன் புனைவுக்குள்
யாராலும் செல்ல முடியாதென்பதால்
கதை கேட்பிகள்
அவன் வாசலில் காத்திருக்கத் தொடங்குகிறார்கள்
ஆசிரமங்கள் பெருகி
நகரங்கள் புடைக்கின்றன.