bird 309மரங்களின் நேசம்
கற்றுக் கொடுத்திருக்கலாம்
சிறகுகள் உதிர்ப்பதை
பறவைகளுக்கு,
இலையைப்போல.

...

வேர்களை நம்பிப்
பயனில்லை
விழுதுகள்.

...

கூடுகட்ட அனுமதி
கேட்பதில்லை
மரங்களிடம்
பறவைகள்.

...

மகிழ்வுடனே
விலைபோயின
குழந்தைகளிடம்
பொம்மைக்காரனின்
பொம்மைகள்.

...

புழுவின் ஈர்ப்பில்
தூண்டிலில் சிக்கி
கரையில் கிடந்த மீன்
வாயைத் திறந்து திறந்து
விடுத்த எச்சரிக்கை
எட்டவில்லை
மீதமுள்ள குளத்து மீன்களுக்கு

...

தோண்டிய
இடத்திலேயே
புதைக்கவும் செய்யப்பட்டது
கிணறு.

- மகிவனி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.