கீற்றில் தேட...

rain 350மழை குளித்துவிட்ட
மரங்களுக்கு
தலை துவட்டியது
காற்று
...............................
குழந்தைகள்
நனையவேண்டி
பொறுமை காத்துப்
பொழிந்தது மழை
பள்ளி விட்டதும்.
...............................
நீள அகலங்களை
அளந்தபடியே
ஓயாமல் அலைந்தது
கண்ணாடித் தொட்டிக்குள்
வாஸ்துமீன்.
...............................
பிணைத்திருக்கும் சங்கிலியை
பிய்த்து எறியும்
பலம் அறியா
யானையின் நிழலில்
உறங்கும் பாகனை
கடித்தது செவ்வெறும்பு...
...............................
நிலவைச்
சிறைபிடித்தது நதி
விடியும்வரை.
ஒளி பாய்ச்சி
உறக்கம் கெடுத்ததால்.
...............................

- மகிவனி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)