தட்டுங்கள் திறக்கப்படும்
திறவுகோலில்லா கதவுகள்

Doorவாழ் நாள் முழுவதும்
கம்பி எண்ணும் சன்னல் கதவுகள்

திறக்காதா என்று ஏங்க வைக்கும்
கோவில் கதவுகள்

உடைத்த ஆசாரியின் வீட்டுக் குழந்தையை
தாங்கும் தொட்டிலாக உருமாறிய கதவுகள்

குழந்தையின் முதல் நிற்றலுக்கு
பிடிமானமாக இருந்த கதவுகள்

அவன் வளர வளர
பிரிவை உணரும் கதவுகள்

அவனின் துக்கத்தைப் பகிர்ந்து
சாய உதவும் தோழமைக் கதவுகள்

இரவு காற்றில் க்ரீச்சிட்டு
பயமுறுத்தும் பேய்க் கதவுகள்

முதலிரவன்று கண்களை
மூடிக் கொண்ட கதவுகள்

மழைச் சாரலை ஏற்று
அலைந்தாடும் ஓலைக் கதவுகள்

வெளி சத்தம் அத்தனையையும் விழுங்கி
சாத்தியதும் அமைதி பரப்பும் கதவுகள்
போல இல்லை தற்கொலைக்காக
தாழிடப்பட்டு இடித்தும் திறவா கதவுகள்

பிணத்தையே வெறித்தவாறு
கதறிக் கொண்டிருக்கும் வாசல் கதவுகள்

அந்தக் கதவுகளை திறந்து விடுங்கள்
அழுது தொலைக்கட்டும்

- குமரகுரு

Comments

2 comments

2
Dr.V.K.Kanniappan
மிக அருமையான கவிதை. வாழ்த்துகள்.
Dr.V.K.Kanniappan
அன்புள்ள குமரகுரு,
உங்கள் கவிதையில் ஈர்க்கப்பட்டு அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து Variety of Doors என்ற தலைப்பில் poemhunter.com ல் உங்கள் கவிதையையும், உங்கள் பெயரையும் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறேன்.

கீழேயுள்ள இணைப்பில் வாசித்துக் கருத்தளிக்க வேண்டுகிறேன்.

www.poemhunter.com/poem/variety-of-doors/

அன்புடன்,
வ.க.கன்னியப்பன்

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.