கீற்றில் தேட...

crow 340

'தாகத்திற்கு தண்ணீர் கிடைக்காமல்
காகம் ஒன்று அலைந்து கொண்டிருந்தது.
உண்பதற்கு உணவை வைத்தவர்கள்,
ஏனோ அருந்துவதற்கு நீரை வைக்கவில்லை.
நெடுநேரத்திற்கு பின்,
குறைகுடம் ஒன்று கண்ணில் தட்டுப்பட்டது.
அலகிற்கு எட்டாத அந்நீரைக் குடிக்க,
அருகில் கிடந்த சிறு கற்களை ஒவ்வொன்றாக
அந்த குடத்திற்குள் போட்டது. கற்களால்
மேல் எழும்பி விளிம்பு வரை வந்த நீரை
அருந்தி விட்டு, தாகம் தணிந்த மகிழ்ச்சியில்
'கா கா' என கரைந்து கொண்டே பறந்தது
அந்த புத்தசாலி காகம்.'
கதையைப் படித்த மாத்திரத்தில்
'யுரேகா யுரேகா' என்று கூவியபடி
வீதியில் இறங்கி ஓடினார் ஆர்க்கிமிடிஸ்.

- இரா.சுப்ரமணி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)