1.
நீ
இல்லாமல்
உ
டை
ந்
து
கி
ட
க்
க்
கி
றே
ன்
பொறுக்கிக் கொள்கிறது கவிதை.
2.
பட்டப் பகலே
உதறிச் செல்கின்றபோது
கெட்ட இரவா
இருந்து கேட்கப்போகிறது?
3.
சமங்களாக
வேண்டியவையெல்லாம்
சவங்களாக.
4
வம்பழுக்கும் கும்பர்களை
வெளுத்துப் பாருங்கள்
இல்லையென்றால்
கொளுத்திப் போடுங்கள்.
5.
பிறைகளின் உருமாற்றம்
பிரச்சினை என்னவோ
நிலாக்களுக்குதான்.
6.
சவப்பெட்டிகள்
அவமரியாதையேற்கும்
சுமைதாங்கிகள் அல்ல
7.
காக்கைகள் செய்த
கலவரத்திற்கு
குயில்களா
குழம்பிக்கொள்வது?
8.
என்
வானத்தில் நட்சத்திர
விருந்தாளிதான்,
வீட்டுக்காரச் சூரியன் கிடையாது
நீ
9.
நீ
பக்கமிருந்து தும்முகிறாயா?
தூரமிருந்துதான்
தும்முகிறாயா?
சொல்
வார்த்தைகளெல்லாம்
வக்காலத்து வாங்கி
வரிசையில் கிளம்பிப் போகிறது
ஏதோவொரு திசையில்.
10.
எச்சியைத் துப்பினேன்
வாய் சுத்தமானது.
11
காமம் விசிலடிக்க
காதல் கைதட்டுகிறது
12.
மனதை அவிழ்
மண்ணில் யாவும் அமிழ்
13.
சில நாடகங்களுக்கு
பின்னணிக் குரல் கொடுப்பவர்களின்
குரலை நம்பவேண்டியதில்லை
14.
என்
கவிதைகளில் மூழ்கி
நீச்சலடித்து
கரையேறிச்செல்கிறாய்
முக்குளிப்பான் பறவையாய் நீ.
- வாலிதாசன், சென்னை-77 (