கீற்றில் தேட...

lady 256புழங்கா அறையின் தூசி
அடிக்கொருமுறை வரைந்து பார்க்கிறது
திசையெங்கும் நடந்து தேய்ந்த பாதத்தின் வெடிப்பை

அணைத்து வைத்த மின்விசிறி
முடுக்கி விடும் ஆணைக்கான உத்தரவோடு
வெறித்துக் கிடக்க

பச்சை கண்ணில் ஒளிரும் இரவு
யாருமில்லையென்ற நினைப்பை
பொடித்துத் தருகிறது
எதிர்வீட்டு மிக்ஸியின் சத்தத்தோடு

நான் தனிமையில்லை
தனிமையில் நானில்லை எனும் நினைப்பில்
திறந்துகொள்கிற வாசல் வழி
வந்துமர்கிறது

தின்னக் கிடைக்கும் சில சொற்களோடு
ஊர்க் குருவி

- ரேவா