கிராமத்தில் அன்று
நிகழ்ந்த
எனது தந்தையின்
மரணத்திற்கு
வீட்டுக்கொருவர் வந்து
அடை மழையிலும்,
கழுத்து வரை நீரில் சென்று
சடலத்தை அடக்கம் செய்தோம்.
வர முடியாதவர்கள்
மற்றொரு நாளில்
நேரிலும், கடிதத்திலும்
அரவணைத்துத்
தேற்றினர்.
நகரத்தில் நேற்று
நிகழந்த மரண செய்தியை
நாளிதழில் பார்த்து
எனது
அடுக்குமாடி மேல் தளத்தில்
குடியிருப்பவர்,
உறவினர்கள்,
நண்பர்கள்
"கடவுள்
உங்களுடன் இருப்பார்" என
குறுந்தகவல்,
இணைய முகநூலிலும்
செய்தி அனுப்பினர்.
"அப்போ நீங்க?" என வந்த
வார்த்தைகளை
தொண்டையில்
பூட்டிவிட்டு
அலுவலகம் கிளம்பினேன்.
- அம்பல் முருகன் சுப்பராயன் (murugan_