தொழில் நட்டத்தில்
தாத்தாவின் வீட்டை
விற்ற அப்பாவிற்கு
நீண்ட பெரிய வீட்டை
கட்டிக்கொடுத்தேன்.
சொல்லி மகிழ்ந்தார்
அப்பா..
என் பேரன்
அவன் அப்பாவிற்கு
தாத்தா வீடு போல
நீண்ட பெரிய வீட்டை
கட்டிக்கொடுப்பான்.
காலம் அவனை
கடன் அடைக்க
வைத்துக்கொண்டேயிருக்கும்
என்னைப்போல...
- அம்பல் முருகன் சுப்பராயன் (murugan_