விரல் சூப்புவது
பிறந்து சிலமாதங்களான குழந்தை
பசியை வெளிப்படுத்தும்
சைகைமொழியில் ஒன்றாக
இருந்திருக்கலாம்.
கருப்பைக்குள்ளிருந்த
பழக்கத்தின் மிச்சமாகவும்
பார்க்கலாம்
சிலருக்கு
வளர வளர விரல்சூப்புவது
கோபத்தையும் கிளறுகிறது
சிலருக்கு
விரல்சூப்பும்
குழந்தைகளைக் காணும்போது
எரிச்சலாயிருக்கிறது
எத்தனைமுறை சொன்னாலும்
எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு
மீண்டும் மீண்டும் விரல்சூப்பும்
குழந்தை
தன்னை ஆறுதல்படுத்திக் கொள்வதன்
அடையாளமாகவும் இருக்கலாம்
இதோ இந்த நள்ளிரவில்
சுவரோரத்தில் புரண்டுபடுத்து
கைசூப்பியபடி உறங்கும்
பள்ளிசெல்லும் குழந்தையொன்றின்
விரல்சூப்புதல்
வன்முறைக்கான
விதையொன்றை
செரிபெல்லத்தில்
திணிக்கத் தயாராகிறது
- இவள் பாரதி (