உலகில் மக்களின் தேவைக் கெனவே
நலமாய் இயற்கை வளங்கள் தன்னை
மனிதன் எந்திரத் துணையொடு படைத்து
நனிசிறக்க வாழும் சமதர்ம முறையை
அறிந்ததி னாலே பிறிதொரு முறையை
சிறிதும் புகழா தென்சிறு மனமே

(உலகில் மக்களுக்குத் தேவையான பொருட்களை இயந்திரங்களின் துணையோடு உற்பத்தி செய்து, நலமுடன் வாழும் சோஷலிச முறையை அறிந்ததினால், வேறு சமூக அமைப்பை என் மனம் புகழ மறுக்கிறது.)

- இராமியா

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.