கீற்றில் தேட...

அகண்ட பெருவெளியாய்
பரந்த மார்போடு
பிணி தீர்த்து மதி மயக்கும் "பகவான் (!?)"

ஆறுதல் மொழியினுள்
சபலப் பிதற்றல்கள்.

தேர்ந்த நடிகனாய்
தினவெடுத்து சூறையாடிய
எச்சமிச்சங்கள் குமட்டியது.

தீண்ட நெருங்கிய சர்ப்பம்
விழி  அக்னி ஜுவாலையால்
அற்பமாய் வறுபட்டு அகன்றது.

மீண்டும்
மோகச் செருக்கில் படமெடுத்து
"(எனது )பெரிதென" காட்ட
"இது கழிவுநீரில் நெளியும் அற்ப சர்ப்பம்" என
சித்தம்  சீறி
மதம் கொண்ட யானையாய்
வதம் செய்யத் துவங்கியதும்
சுருண்டு, ஓடுங்கி
மெதுவாய் நெளிந்து
வெளியேறிய நாகம்
வேறிடம்  போனது.

- ஜீனத்