கீற்றில் தேட...

நீங்கள் என்னை
வெளிச்சத்திற்கு
வரச் சொல்கிறீர்கள்

எனக்குத் தெரியும்
நான் இருட்டில் இல்லையென்பது

எனில்
நாம் எங்கிருக்கிறோம்?

என் வெளிச்சம்
உங்களுக்கு இருட்டாகவும்
உங்கள் வெளிச்சம்
எனக்கு இருட்டாகவும்
தெரியும் பட்சத்தில்
பெரிதாய் என்ன செய்து விடப்போகிறோம்
எதிரெதிரே நின்றுகொண்டு
கேலிபேசுவதைத் தவிர

எல்லோரையும்
வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்வதில்
உங்களுக்கு எதற்கு
இத்தனை அக்கறை?

உங்களைப் போலவே
என் வெளிச்சத்தின் மீது
எனக்கு நம்பிக்கை இருக்கிறது

நீங்கள் போகலாம்

- இரமணிஷர்மா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)