கீற்றில் தேட...

சாதியும் வர்க்கமும் இணையாய்ச் செல்லும்
மேதினி அறியாச் சமூக அமைப்பில்
வர்க்கப் போரை முன்னே எடுக்கத்
தர்க்க வழியில் முரணாய் உளதால்
அனைத்து வருண மக்கள் தானும்
அனைத்துப் படிநிலைப் பணிகளைச் செய்யும்
காலம் வரையிலும் வர்க்கப் போர்தான்
மேலே வருதல் அரிதினும் அரிதே

          ((இந்தியாவைத் தவிர) உலகின் வேறு நாடுகள் அறியாத சாதியும் வர்க்கமும் இணையாகச் செல்லும் சமூக அமைப்பில் (சாதிப் பிரச்சினைகளை அதாவது பார்ப்பன ஆதிக்க ஒழிப்பை முன்னெடுக்காமல்) வர்க்கப் போரை முன்னே எடுப்பது தர்க்க ரீதியாக முரணானதாகும். அனைத்து வருண மக்களும் அனைத்துப் படிநிலை வேலைகளையும் செய்யும் காலம் வரையிலும் வர்க்கப் போர் மேலே வருவது மிகவும் அரிதாகும்)

- இராமியா