உழைத்திடும் மக்கள் விடுதலை அடையும்
பிழையிலா  அமைப்பாம் சமதர்ம அரசை
அமைத்திடும் முயற்சியில் தடைகளைத் தகர்த்தும்
சுமைமிகு வழியின் தொலைவறி யாதும்
உடன்விளை விலேனும் மனந்தள ராது
கடமை செய்யும் தோழனே வாழ்க

          (உழைக்கும் மக்களுக்கு விடுதலை அளிக்கும் பிழையில்லாத அமைப்பான சோஷலிச அரசை அமைப்பதற்கான முயற்சியில் தடைகளைத் தகர்த்தும், (அப்படிப்பட்ட போராட்டத்தின்) சுமை மிகுந்த வழியின் தொலைவு என்ன என்பதை அறியாத நிலையிலும் தங்கள் போராட்டத்திற்கு உடனடியான பலன் இல்லை என்றாலும் (எதிர் காலத்தில் விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில்) மனம் தளராது கடமையைச் செய்து கொண்டு இருக்கும் தோழர்கள் வாழியவே!)

- இராமியா