கீற்றில் தேட...

கேட்கத் தயங்கும் கேள்விகளும்
மொட்டவிழாத மெளனங்களுமாய்
நிறைந்து கிடக்கின்றன‌
கிழக்கில் நிழல் நீளும்
என் மாலையெங்கிலும்...

ஒளி மறைந்து
இருள் அடர்ந்து
நிசப்தங்களால் நிறைந்திருக்கும்
யாமங்கள் யாவிலும்
கேள்விகளால் துளைக்கப்பட்டு
மொட்டவிழத் துடிக்கின்றன‌
மெளனங்கள்...

இருள் கடலின்மேல்
ஒளிச்சாறைக் கரைத்தூற்றி
மெதுவாய்ப் புலரத் தொடங்குகிறது
பொழுது...

விடியலில் அடங்கும்
கேள்விகளுடன்
உறங்கிப் போகிறது மெளனம்...

மாலை வெயில் மங்குகையில்
மீண்டும் மெதுவாய்க்
கிழக்கில் நீளலாம்
கேள்விகள்...

- த‌னி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)