இழுத்து அணைத்துக்கொள்ளும்
என் குளிர்ந்த கரங்களை
உனது உள்ளங்கைக்குள் கோர்த்தபடி
வெப்பம் பகிர்கிறாய்
உயர்த்தி நோக்கும் பார்வையோடு
காதலை ஊடுருவி
ஒரு குவளைக் காபியை உதடு அழுந்த
நிதானமாகக் குடிக்க முடிகிறது உன்னால்
முத்தம் என்பது
வெறுமனே ஒரு முத்தம் மட்டுமே அல்ல
என்பதைப் போல முத்தமிடுகிறாய்
முத்தத்தின் சிறகுகள்
உடல் முழுதும் பரவுகிறது
அதன்
எண்ணற்ற வர்ணங்களைத் தூவியபடி
உன்னை அத்தனை வாஞ்சையோடு
பருகிட விரும்பினேன்
என் உலகை இரண்டாய்ப் பிளந்து வைக்கிறது
காபி வாசனையில் தோய்ந்த உன் சிறகு
-- இளங்கோ (