சோவியத்து நாட்டின் சமதர்ம ஆட்சியில்
ஈவிரக்க மின்றி அடிமை விலங்கை
உடைத்து விடுதலை பெற்ற பின்னே
தடையிலா உற்பத்தி ஆற்றலி னாலே
தன்னுடைத் தேவை நிரம்பி மகிழ்ந்து
மன்னுயிர்ச் சேவை செய்ததி னாலும்
அன்னதன் வீழ்ச்சி அம்மக்களுக் கன்றி
நன்மக்கள் யார்க்கும் வீழ்வே என்று
சென்னைப் பல்கலை முன்னாள் நாயகர்
பொற்கோ சொன்னவை நினைத்தற் குரியதே

          (சோவியத் நாட்டின் சோஷலிச ஆட்சியில் (சுரண்டல் என்னும்) அடிமை விலங்குககளை ஈவு இரக்கம் இன்றி உடைத்து, விடுதலை பெற்ற பின், தடையில்லா உற்பத்தி ஆற்றலினால் தன் நாட்டு மக்களின் தேவைகளை நிறைவேற்றியது மட்டும் அல்லாமல் மற்ற நாடுகளின் முன்னேற்றத்திற்காகவும் (பார்க்க: புது நானூறு 92) உதவி செய்ததினால், அநநாட்டின் வீழ்ச்சி அந்நாட்டு மக்களுக்கு மட்டுமன்றி (உலகில் உள்ள) நன்மக்கள் அனைவருக்கும் வீழ்ச்சியே என்று சென்னைப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பொற்கோ அவர்கள் கூறியது நினைவில் கொள்ளத் தக்க சொற்களே)

- இராமியா