முத்தமிடும் வேட்கையை
முழுக்கண்ணும்
முரசு கொட்டுகிறது!
முடியாதென்றால்
விடவாப்போகிறாய்?
வீட்டில் யாருமில்லை
பொன்னான  வாய்ப்பு தான்உனக்கு!

போ என்றதை
வா என்றே
புரிந்துகொள்ளும் காதலனிடம்
போராட முடியுமா
போராடவும் தோன்றுமா?

ஆசையாய் அருகில் வருகிறாய்
உன் அன்பான பார்வையில்
அடிமையாகிப்போகிறேன்
சத்தமின்றி நடக்கப்போகும்
முத்தப்பரிமாற்றம்!

முதல்முத்தக்கனவில்
கண் மூடி
பரவசத்தில் இதழ்
துடிக்க நின்றபோது
வாசலில் ஆள் அரவம்!
 
சட்டென பயத்துடன்
 நீ விலகிக்கொள்ள
சங்கட மௌனத்தில்
நான் தவிக்க
நம்மிடையே
முத்தம் மட்டும்
இன்னமும்
சத்தம் போட்டபடி..

Comments

1 comment

1
Saradha
அருமை............பரவசத்தில் நானும்

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.