தலைக்கவசம் அணியாத
இருசக்கர வாகனக்காரன்
தண்ணீர் உந்து ஓட்டுநரின்
தாறுமாறான கைங்கர்யத்தால்
திருஷ்டிபூசணி போல்
தலை நசுங்கி உயிர்விட
காவு வாங்கிவிட்டதாக
வீண்பழி விழுந்தது,
பனைமரத்துப் பட்சிகள்
புளிச்சென எச்சமிடும்
பைபாஸ் கருப்பணசாமியின்
வீச்சமெடுத்த உச்சந்தலை மீது!
- ஸ்ரீதர்பாரதி