கீற்றில் தேட...

பழுப்பு நிற புழுக்கள்
புசித்து மிஞ்சிய
தாய் நிலத்தின் சடலத்திலிருந்து
மிக மெல்லிய இசை துளிர்க்கிறது அவை
மழைத்துளிகள்
ஓரிலை நுனியினின்று
தெப்பத்திற் தெறிப்பதற்கு முன்பான
மிக சன்னமான இசையை ஒத்திருக்கிறது
எடையற்ற அவ்விசைக்குறிப்புகள்
காற்றுக்கும் மணல்வெளிக்குமிடையில் ஓவியமாகி
சிற்றோடைக்கும் சிறுபாறைகளுக்குமிடையில் ரகசியமாகி
அடங்கா ஆறுகளுக்கும் தடுப்பணைகளுக்குமிடையில் ஏக்கம் பெருக்கி
நீலக்கடலுக்கும் நீளும்கரைகளுக்குமிடையான
மாரடிப்பில் மரித்துப் போகிறது
இவ்வாறாக எமதிசையின் மரணம்
இனிதே நிகழ்கிறது

- அர்வின் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)