கீற்றில் தேட...

ஏரிக்கரை உழவுக்காட்டில் 
ஏரோட்டும் கோவணாண்டிக் கிழவன் 
நட்ட நடு மதியத்தில் 
மோர்மிளகாய் வெஞ்சனத்துடன் 
அண்ணாந்து அருந்துகிறான்
அகோரப்பசியில்,            
கொஞ்சம் கூழையும்
நிறைய வெயிலையும்!

- ஸ்ரீதர்பாரதி