கீற்றில் தேட...

உள்ளாடையின் மேல்விளிம்பு
வெளியே நீட்டிக் கொண்டிருப்பதை
பொருட்படுத்தாத நீ,
உரக்கச் சிரிப்பதும்
ஆண்கள் அழுவதும்
இருகைகளால் கோப்பையைப் பிடித்து
தேநீர் அருந்துவதும்
அநாகரீகம் என்ற முறைமையை
யாரிடம் கற்றாய் ?

உன் முறைமைகளை
கட்டிக் காக்கும்பொருட்டு
சதா சிடுசிடுக்கும் உன் முகம்,
உன் முகமாக இல்லாமலிருப்பதைப் பற்றிய
கவலையெதுவும் உனக்கில்லை
எனக்கு கவலையாக இருக்கிறது
உன் அபத்த முறைமைகளைப் பற்றியும்
உன் துர்முகத்தைப் பற்றியும்

- க.உதயகுமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)