எரியும் பிணவாடையோடு
மேல்விழுகின்றன சொற்கள்
நாசியில் ஊர்ந்தேறி
சுவாசத்தில் பரவுகிறது
சுடுகாடு
விரைத்தெழுந்து
வீழ்கிறது
இருதயம்
விழிகளில்
தீனமாய்
வழிகிறது
உப்புக்கரிக்கும் குருதி
குளிர்காலத்தின் வருகையை
இசைத்தபடி
கடக்கிறது காற்று
சட்டை செய்வதாயில்லை
உள்ளுறை வெப்பத்தில்
சிவக்கும் என் பாடல்
- க.உதயகுமார்