கீற்றில் தேட...

இருள்கப்பி
கூடடையும்
தாய்ச்சிறகின்
கதகதப்பில்
இறகளந்த
வெளியின்
வாசப்பொதி

குறுஞ்சிறகின்
விரிப்பில்
ஆதிக்கனவின்
நீட்சியென
தீராப்பயணம்.

- இசை (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)