கீற்றில் தேட...

காதலிக்காமல்
தவறிழைத்தவர்கள்
தண்டிக்கப் படுகிறார்கள்
முத்தங்களால்..!

போர்களால்..
அமைதியிழந்த
உலகை மீட்க..
பூக்கள் தவங்கிடக்கின்றன..!

ஒரு குழந்தையின்
பாதம் படுவதால்
ஆசீர்வதிக்கப்படும் பூமிக்காக
காதலர்கள்
கலவி கொள்கிறார்கள்..!

துயில் கொள்ளாத இரவுகளால்
வம்சங்களின் நெசவு
நெய்யப்படுகிறது..!

பெளர்ணமிகளும்
நட்சத்திரங்களும்..
பார்த்துக்கொண்டிருக்கும்
இரவுகள் அழகானவை..!

வண்ணத்துப்பூச்சியின்
சிறகுகளிடம்
மென்மையைக் கடன் வாங்காத
மனிதக்கூட்டம்
வன்முறையால் அழிந்து போகும்..!

- அமீர் அப்பாஸ்