ஈண்டுநின் றோர்க்கும் தோன்றும், லெனினியம்
சென்றுநின் றோர்க்கும் தோன்றும், குறைவற
உலகின் மக்கள் இன்மையின் கொடுமையை
விலக்கும் வழியை உரைத்ததி னாலும்
மக்களின் மனமும் இயல்பாய்க் கொடுமையை
எக்கணமும் எதிர்க்கும் குணம்கொண் டதாலும்
(உலகில் உள்ள மக்கள் (இல்லாமையின்) கொடுமைகளை எதிர்க்கும் குணத்தை எப்பொழுதும் இயல்பாகவே கொண்டு இருப்பதால், இல்லாமையின் கொடுமைகளை நீக்கும் வழியை உரைத்த லெனினியக் கருத்தியல் அருகில் இருந்து பார்ப்போருக்கும் தெலைவில் இருந்து பார்ப்போருக்கும் தெளிவாகவே தெரியும்)
- இராமியா