கற்றையாய் விழுந்து
ஒளி பரப்பிக்கொண்டிருந்தது
காலை வெயில்...
என் எண்ணங்களில்
எங்கேயும்
காலை குறித்த
வெளிச்சமில்லை...
காலையையும்
அதன் வெளிச்சங்களையும்
மாலையையும்
அதன் இருளையும் தாண்டி
தனக்கான
வெளிச்சங்களையும் இருளையும்
எண்ணங்கள் தன்னியல்பில்
அணிந்துகொள்கின்றன...
- தனி (
கீற்றில் தேட...
எண்ணங்களில் எங்கேயும்
- விவரங்கள்
- தனி
- பிரிவு: கவிதைகள்