கீற்றில் தேட...

முடிந்துவிட்ட ஒரு பொழுதின்
முடிவுறாப் புள்ளியில்
நிலை நிற்கிறாய் நீ...

என் புலராப் பொழுதுகளின்
அதிகாலைப் பனியில்
அவிழ்ந்து கிடக்கிறாய் நீ...

இருளாத கருக்கலின்
அடர்ந்த காட்டுக்குள்
மறைந்து நிற்கிறாய் நீ...

என் அகண்ட‌ விழிகளின்
வெளிரிய‌ பாவைக்குள்
அமிழ்ந்து கிடக்கிறாய் நீ...

உன் பாதைகளின்
பக்கவாட்டில்கூட‌
நான் இருப்பதாய்த்
தோன்றவில்லை...

- த‌னி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)