நடு இரவில் துர்சொப்பனங்களால்
பீடிக்கப் பட்டு
படுக்கையில்
மலங்கழித்தான்
உமையாள் மணாளன்
சக்திக்கு
இடம் தந்ததால்
எள்ளல்களுக்கு உள்ளாகும்
அவலம் எண்ணி
ஊரார் கிண்டல்களுக்குப்
பயந்து
அழுது புலம்பினான்
சிறுநீர் கழிக்க
ஆண்கள் பகுதிக்குச்
செல்கையில்
உற்று நோக்கின
காமம் தெறிக்கும்
கண்கள்
பெண்கள் பக்கம்
அனுமதி
மறுக்கப்பட்டது
ஒன்றுக்கும்
இரண்டுக்கும்
போக
மூன்றாமிடம்
தேவை என்றலறினான்
கழிவறையில் உனக்கோர்
இடமில்லாதபோது
நீ கருவறையில்
உறைவதெங்ஙனம்
மாதொருபாகா.........
கீற்றில் தேட...
மாதொருபாகன்!
- விவரங்கள்
- அதீதன்
- பிரிவு: கவிதைகள்