வினைஞர் ஆட்சி நிலைத்த காலையில்
அனைவரும் வேலை பெற்றிட லானோம்
தலைநிமிர் வாழ்க்கை நிலைபெற வாழ்ந்தோம்
நிலையிலாச் சந்தையின் ஆட்சியில் இன்று
ஏய்ப்பவர் உயரவும் உழைப்பவர் தாழவும்
வாய்மை அழிதலின் வலியில் துடிக்கிறோம்

(தொழிலாளர்களின் ஆட்சியான சோஷலிச ஆட்சியில் அனைவருக்கும் வேலை கிடைத்துக் கொண்டு இருந்ததால் நிலயான (நிம்மதியான) வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருந்தோம். (ஆனால்) இன்று (மக்களை நிம்மதி இல்லாமல் வைத்துக்கொள்ளும்) நிலையில்லாத சந்தையின் (அதாவது முதலாளித்துவ) ஆட்சி வந்த பின், ஏய்க்கும் கூட்டம் உயரவும் உழைக்கும் கூட்டம் தாழவும் ஆன நிலை ஏற்பட்டடு உள்ளதால் வாய்மை அழியும் நிலையில் வலியால் துடித்துக் கொண்டு இருக்கிறோம்)

- இராமியா