கீற்றில் தேட...

எனக்கான கடவுளின் வடிவமைப்பிற்கு
சேகரிக்கிறேன்
ஏராள்மான பொருட்களை.
ஆணா பெண்ணா அல்லது
அதையும் கடந்தவரா என்கிற தீர்மானத்தில்
ஆரம்பமானது என் முதல் குழப்பம்.
ஆடை அணிகளன்களை
மாற்றி அணிவித்தும் கிடைக்கவில்லை
எனக்குகந்த கடவுள்,
அவரின் பாதுகாப்புப் பெருட்டு
ஆயுதங்களுடன் படைக்க
விரிந்த கண்களின் அக்கினிப்பார்வையில்
தொற்றிக்கொண்டது
பக்தியை மீரியபடிக்கு பயம்.
என் முயற்சிகள் முற்றும் தோற்றுப் போக
மனம் உடைந்து பூங்காவினைக் கடந்து போக
மடிக்கணினியுடன்
மரத்தடியில் அமர்ந்திருந்தார் கடவுள்
அவர் படைத்த
மனிதர்களை கூகிளில் தேடிக்கொண்டு