வினைஞர் ஆட்சியில் மிகைமதிப் பெல்லாம்
அனைவரும் துய்க்கப் பொதுவில் இருப்பதால்
கல்வி மருத்துவம் கட்டமைப்பு வசதிகள்
இல்லை யென்னா தெல்லோரும் அடையத்
தேவையின் அளவில் கிடைக்கும் அன்றோ

(தொழிலாளர்களின் (அதாவது சோஷலிச) ஆட்சியில், உழைப்பால் உருவாகும் மிகை மதிப்பு (அதாவது முதலாளித்துவ ஆட்சியில் முதலாளிகள் சுருட்டிக் கொள்ளும் இலாபம்) அனைத்தும், அனைத்து மக்களுக்கும் பயன்படும் படியாகப் பொதுவில் இருக்கும் என்பதால், கல்வி, மருத்துவம், கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் இல்லை என்று சொல்லாது அடையும் படியாக, தேவைப்படும் அளவிற்கு அனைவருக்கும் கிடைக்கும்)

- இராமியா

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.