சலனமற்ற நீரில் தெரியும்
பிரதிபலிப்புகளாகவும்
நிஜமென்று மயங்க வைக்கும்
பிம்பங்களாகவும்
காண்கின்ற யாவும்.
வாய் எழுப்பும் ஒலிகளாலும்
கட்டமைத்த உருவகங்களாலும்
உருவாகிக் கிடக்கிற இவ்வுலகின்
எத்திக்கிலும்
சொற்களின் விளையாட்டு
மொழிகளின் இராஜ்ஜியம்.
அவை அற்றுப்போகிற
சிறு இடைவெளியில்
வீழநேரும்
இருள் சூழ்ந்த
மெளனப் பள்ளத்தாக்கில்..
அபூர்வமாய்க் கிட்டக் கூடும்
மெய்யெனப்படுபவை மெய்யாக.