உன்னை எனக்கு
நன்றாகத் தெரியும்.
என்னை உனக்கும்.

ஒருமுறை...
உனது வீட்டிற்கு வந்திருக்கிறேன் நான்.

புத்தாண்டு, தீபாவளி வாழ்த்துக்களைப்
பரிமாறிக் கொண்டிருக்கிறோம் நாம்
ஒரே தெருவில் வசிப்பதால்.

என்றாலும்-
நேற்று ஒரு சங்கடத்தில்
நான் சிக்கித் தவிக்கையில்...

என்னைக் கடந்து செல்கிறாய் நீ
நிற்க விரும்பாத தயக்கத்துடனும்...
அதீத வேகத்துடனும்.

'யாரோ'வாகிக் கொண்டிருக்கிறது
நம் பரிச்சயங்கள்.

Pin It