தெரியுமா
ஒரு குண்டூசியில் எழுபத்திரண்டு உழைப்பிருப்பது?
சேட்டும்
சேட்டனும்கூட இங்கு
வளமாக வாழலாம்
நாங்கள் மட்டும் கூடாது.

ஒரு தலைமுறையாகச் சேர்த்து
ஒரு அடி முன்னேறினால்
ஒரேயடியாகக் கொள்ளையடித்து
சூறையாடிவிடுகிறீர்கள் எங்கள் வாழ்க்கையை.

நல்லவேளை
வெண்மணியில் அவர்கள் எங்களை
வீட்டோடு சாம்பலாக்கியதைப் போல்
நீங்கள் செய்யவில்லை.
அந்தளவில் நீங்கள் 'பெரியமனது' படைத்தவர்கள்தான்.

Pin It