நேற்று முன்தினம், தற்காப்புக்கு ஆக ஓடி ஒரு வீட்டிற்குள் ஒளிந்துகொண்ட ஆண், பெண், குழந்தைகள் உட்பட 42 பேர்கள் பதுங்கிக் கொண்ட வீட்டைப் பூட்டிவிட்டுக் கொளுத்தி, 42 பேரும் கருகி சாம்பலாக்கப் பட்டிருக்கிறார்கள். இவ்வளவு அரசியல் கட்சிக்காரர்களால் பட்டப்பகலில் வெட்ட வெளிச்சத்தில் வெளிப்படையாகவே செய்யப் பட்ட காரியங்களாகும். சட்ட விரோதமான, பலாத்காரமான, நாசவேலை களான காரியங்களைச் செய்து அதன் மூலம் பலன் பெறுவதற்கென்றே ஏற்படுத்திக் கொண்ட ஸ்தாபனங்களாலேயே, அவற்றின் பலனாகவே செய்யப்பட்ட, நடைபெற்ற காரியங்களாகும். இவைகளை அடக்கப் பயன்படும்படியான போதிய சட்டமில்லை, சட்டம் செய்வது மூலதாரக் கொள்கைக்கே விரோதமாக இருந்து வருகிறது. சட்டத்திற்கும் நீதிக்கும் சம்பந்த மில்லாத நீதிஸ்தானங்கள்தான் நிறைந் திருக்கின்றன. சட்டங்களின் யோக்கியதை இப்படி இருக்க ‡ பழி வாங்கும் ஜாதி உணர்ச்சி கொண்ட சுயநலத்தையே முக்கியமாய்க் கருதுகிற நீதிபதிகளே 100க்கு 90 பேர்களாக இருக்கிறார்கள்.

( கீழ் வெண்மணியில் 42 தலித் மக்கள் கொல்லப்பட்டதை அடுத்து தந்தை பெரியார் விடுத்த அறிக்கையின் ஒரு பகுதி - விடுதலை 28.12.1968 )

 

Pin It