முள்ளற்ற இலந்தை மரத்தின்
நீண்ட நிழல்

தெளிவான உயர் மது நிரம்பிய
கிண்ணங்கள், குவளைகளை
ஏந்தியபடி அலையும் சிறுவர்கள்
பட்சிகளின் மாமிசம்
காலவித்தியாசமின்றி எச்சமயத்திலும்
செழித்துக் கிடக்கும்
ஏராளமான கனிவர்க்கங்கள்

ஒன்றின் மேல் ஒன்றாக
உயரமாக்கப்பட்ட விரிப்புகளில் கம்பளங்களில்
இருக்கைகள், சிம்மாசனங்கள்
பொன்னிழைகளால் ஆன உன்னதக் கட்டில்கள்

கேட்பது அத்தனையும் கிடைக்கும்
நினைப்பது வசமாகும்
 
எத்தனை பரவசமானது
பிர்தவ்ஸ்

இலந்தை மரத்தின் நிழலாக
ஓடிக்கொண்டேயிருக்கும்
நீராறு, பாலாறு, தேனாறு, மதுவாறு
பட்சிகளின் மாமிசமாக
கனிவர்க்கமாக
ஹூருல் ஈன்களும்…

பெண்ணுடல் மீளுருவாகிறது
நன்மையான செயலுக்குக் கூலியாக
ஹூருல் ஈன்கள்

ஆக, சொர்க்கத்திலும் பிண்டம்தான் பெண்!

***
1. பிர்தவ்ஸ் - சொர்க்கம்
2. ஹூருல் ஈன்கள் - இளமையான சொர்க்கத்துப் பெண்கள்

Comments

6 comments

6
Abdullah
ஹூருல் ஈன்கள் - என்பது அழகிய நேலமன கன் உடையோர் பெண்கள் - ஆண்கள் இருவருக்கும் பொருந்தும்
ஷாலி
ஈரானில் பிறந்து வளர்ந்து இஸ்லாத்தை விட்டு வெளியேறி, அமெரிக்காவால் வளர்த்தெடுக்கப்பட்ட பெண்ணுரிமைப் பெதும்பை பர்வின் தரபியின் வாக்கு மூலத்தை, அப்படியே கவிதையாக வடித்தெடுத்திருக்கிறார் ஈழக்குயில் ஸர்மிளா.
தமிழ் பேசும் நல்லுலகிற்கு ஒரு தஸ்னீமா நஸ்ரின் இல்லையே என்ற ஏக்கத்தை போக்க,வாராது வந்த மாமணியாய் இப்பெண்மணி இருப்பார் என்ற நம்பிக்கையோடு இனி இருக்கலாம். இனி தமிழ் லஜ்ஜாக்களை ஆவலோடு எதிர் பார்ப்போம்.
Mustafa Ibrahim
அருமை சகோதரி வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி
தூற்றுவோர் தூற்றட்டும் அதற்க்காக நீங்கள் தூங்க வேண்டாம்.
இளங்கோ
*
// பெண்ணுடல் மீளுருவாகிறது
நன்மையான செயலுக்குக் கூலியாக
ஹூருல் ஈன்கள் //

சொற்களுக்குள் புதைந்து கிடக்கிறது வாழ்வும் குரலும்...
முன்பு போல் மீண்டும் அதிகம் எழுதுங்கள்..
irshana
last line we can't accept. you are cheet our women society, because hoorul eans womens are not use sex. they are loving other muslim youths. ok don't mis understand our culture. you are only think sex. that is not life. other part have lot of pillars .ok sister. don't
அமீர் அப்பாஸ்
சமீபத்தில் நான் வாசித்த
மிகச்சிறந்த கவிதை.
மென் உணர்வில் தொடங்கி
அறச்சீற்றத்தில்
கவிதை முடியும் தருணம்,
குற்ற உணர்வு பெருகிறது.
வாழ்த்துக்கள்..!

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.