அரசுத் துறைகளை
கவ்வியபடி பறக்கின்றன
உலகமய வல்லூறுகள்

விளை நிலங்களை
வீடுகளாக்கி வசிக்கிறது
தகவல் தொழில்நுட்பம்

வாங்கி முடித்த
மருத்துவமும் பொறியியலும்
திண்ணைகளை அலசுகின்றன

சுய தொழில்களால்
நீண்டு கிடந்த சாலை
இருட்டுக்குள் மூழ்கியிருக்கிறது.

கிளியிடமிருந்த
விடுதலை பெற்ற நான்
கணிப்பொறியிடம் கையேந்துகிறேன்
முன்நகர
ஒரு வழித்தடம் பார்க்கச் சொல்லி...

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.