கீற்றில் தேட...

விசேசமான மழையென்ற
வானிலை அறிக்கை
எனக்காகவும்
எங்கள் அனைவருக்காகவும்
வாசிக்கப்பட்டது

வீட்டிற்குள்
நிரம்பியிருப்பதைப் போல
வடகிழக்கிலும்
தென்மேற்கிலும்
அதை வாசிக்க முடியவில்லை

கூர்க்காவின் கைத்தடி
ஆழ்கடலில்
கடந்து போவதை கணக்கிடுகிறது

வெளியில் அமர்ந்திருக்கும் செவி
அயர்ந்து உறங்கும் மனைவி
அதிகாலையை எழுப்புவதற்குள்
உறங்குவதுபோன்ற
பாசாங்கில்தான் விழிக்க முடிகிறது

மேகங்களே வழிதவறாதீர்கள்
உங்களோடு
பேசவும் நட்பு கொள்ளவும்
ஆவல் மிகக்கொண்டுள்ளோம்
நானும்
மிதிவண்டியில்
தொங்கும் குடங்களும்..