கீற்றில் தேட...

முத்தங்கள்
அன்பை மட்டும் சொல்வதில்லை
நம்பிக்கையைச் சொல்கிறது
மகிழ்ச்சியைப் பரப்புகிறது
விடைபெறுதலை முன்னிறுத்துகிறது
முத்தத்தால் என்ன வேறென்ன செய்ய முடியும்?
ஊடலை முடிவுக்குக் கொண்டு வர முடியும்..

--------------

ஒரு முத்தம்
என்ன செய்து விடக்கூடும்?
காயங்களை மேலும் அழுத்தலாம்..
நஞ்சில் தோய்க்கப்பட்டிருக்கலாம்..
வெறுப்பை மறைத்து முலாம் பூசப்பட்டிருக்கலாம்...
வெற்றுச்சிரிப்பை  மட்டும் உதிர்க்கலாம்..

----------------

வயது வந்தவர்களின் முத்தங்களைப்போல
எல்லைக்குட்பட்டதல்ல..
ஒரு குழந்தையின் முத்தம்..
அது துயர்களிலிருந்து சற்றே விடுபடவும்
மன விசும்பலை சற்றே நிறுத்தி வைக்கவும்
அடுத்த செயலுக்கு ஆயத்தமாகவும்
சோர்வினை விரட்டவும்
உள்ளத்திலிருந்து புன்னகை பூக்கவும் வைக்கிறது...

ஒரு குழந்தையின்  முத்தம்
வெறும் முத்தமல்ல..
அது உலக சமாதானத்தின் குறியீடு
ஒரு குழந்தையின் முத்தத்தின் பின்னால்
வெறும் முத்தத்தை தவிர
வேறொன்றுமிருப்பதில்லை..
இவைதவிர
நம்மைப் போல் குழந்தைகளுக்கு
முத்தமிடுவதற்கு காரணங்களே இருப்பதில்லை...

- இவள் பாரதி