உன்
பாத சுவட்டிலும்
சிறுநீர் தடத்திலும்
பிக்காசா ஓவியமானது..
ஆண்டாண்டு காலமாய்
அம்மா வரைந்த
எட்டு புள்ளிக்கோலம்....
**************
பூசையின் போது
நடு வீட்டில்
உச்சியில் அருகம்புல்லுடன்
அய்ய்யே... சாணி
மழலை மொழியில் ...நீ
ஆயிரம் பொதுக்கூட்டத்துக்கு சமம்...