பந்தல் போடப்பட்ட ஆளில்லா வீடு
பாதி வேயப்பட்ட ஒரு கூரை வீடு
கூட்டம் கலையும் தெருச் சண்டை
பூட்டிக் கிடக்கும் பள்ளிக் கூடம்
பிடுங்கி நடாத நாற்றங்கால்
கடுமையாய் சிறுவனைத் தண்டிக்கும் தாய்
மனதை அரிக்கும்
ஏன்? என்ற கேள்வியுடன்
ஊருக்கு ஒன்றாக
பார்த்துச் செல்கிறேன்
பேருந்தில் ஆழ்ந்த
உறக்கத்தில்
சக பயணிகள்
- அருண் காந்தி (